shadow

1400 கிமீ நீளத்தில் இந்தியா-தாய்லாந்து-மியான்மரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை
1001
இந்தியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய மூன்று நாடுகளை தரைவழியே இணைக்கும் 1400 கிமீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைக்கான பணிகள் கடந்த சில வருடங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த சாலை தற்போது முடிவடையும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இந்த தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தாய்லாந்து நாட்டின் இந்தியத் தூதர் பகவந்த் சிங் பிஷ்ணோய் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2ஆம் உலகப் போரின்போது மியான்மரில் கட்டப்பட்ட 73 பாலங்களை இந்திய நிதியுதவியில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவுற்றால்தான், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடக்க வாகனங்களுக்கு அனுமதி அளிக்க முடியும்.

பாலங்களைப் பழுதுநீக்கும் பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெற்றுவிடும். அதன்பின்னர் இந்தியாவை தாய்லாந்து மற்றும் மியான்மருடன் இணைக்கும் நெடுஞ்சாலை, வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்படும்.

இந்த நெடுஞ்சாலையின் தொடக்கம், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மோரே பகுதியில் உள்ளது. இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் கருத்துகள் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் நிலை காணப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையானது சரக்குகளின் போக்குவரத்துக்கு உதவியாக இருக்கும். இரு நாடுகளும் கலாசாரம், ஆன்மிகம் மற்றும் மொழியியல் ரீதியிலான தொடர்புகளைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

ஏற்கனவே பாகிஸ்தானுக்கு தரைவழி போக்குவரத்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தாய்லாந்து மற்றும் மியான்மருக்கும் விரைவில் தரைவழி போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply