shadow

India-Oman FIFA World cup 2018 qualifying matchஉலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தகுதி சுற்று போட்டியில் ஏற்கனவே ஓமன் அணியிடம் 2-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்த இந்திய கால்பந்து அணி இன்று பசுபிக் பெருங்கடலில் உள்ள குட்டிதீவான குவாம் என்ற நாட்டு அணியுடன் மோதி தோல்வி அடைந்துள்ளது.

குவாம் நாட்டின் மொத்த ஜனத்தொகையே வெறும் 2 லட்சதாம். இந்த நாட்டு அணியிடம் 120 கோடி ஜனத்தொகையுள்ள இந்திய அணி தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியாக கருதப்படுகிறது.

இந்த போட்டி, காலை 11.45 மணியளவில் தொடங்கியது. இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து அர்னாப் மாண்டல் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சுனில் சேத்ரி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். முதலில் இருந்தே விறுவிறுப்பாக இரு அணிகளும் விளையாடியபோதிலும் இறுதியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஃபிபா தரவரிசையில் 141வது இடத்தில் உள்ள இந்திய அணி, 174வது இடத்தில் உள்ள குவாம் அணியிடம் தோல்வி அடைந்ததை இந்திய கால்பந்து ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply