நவம்பர் 8 அறிவிப்புக்கு பின்னும் குறையாத சொத்துமதிப்பு. தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடம்

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருந்த பல கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு வீழ்ச்சி அடைந்தது. ஆனால் நவம்பர் 8 அறிவிப்புக்கு பின்னரும் தொடர்ந்து இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்]

ஹூரன் ரிப்போர்ட் இந்தியா என்ற நிறுவனம் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் குறித்த பட்டியல் ஒன்றை எடுத்து அதன் முடிவை இன்று அறிவித்தது. இந்த பட்டியலின்படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ரூ.1.75 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்

அம்பானியை அடுத்து ரூ.1.01 லட்சம் கோடி (1,400 கோடி டாலர்) சொத்துக்களுடன் அசோக் லேலண்டு குழுமத்தின் எஸ்.பி. இந்துஜா குடும்பத்தினர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

ரூ.99 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் சன் பார்மா நிறுவன தலைவர் திலீப் சாங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 22 சதவீதம் சரிவடைந்துள்ளது. சன் பார்மா நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 18 சதவீதம் குறைந்ததே இதன் பின்னணியாகும்.

பலோன்ஜி மிஸ்திரி ரூ.82,700 கோடி (1,200 கோடி டாலர்) சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *