shadow

cricket 1இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர்களின் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாலோ ஆன் ஆன வங்கதேச அணி, மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இதில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டம் மழை காரணமாக இரண்டு நாட்கள் தடைபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்.

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 462/6

முரளி விஜய்    150
தவான்        173
ரஹானே         98

வங்கதேசம் முதல் இன்னிங்ஸ்  256/10

இம்ருல் கெய்ஸ்    72
லிட்டன் தாஸ்    44
செளம்யா சர்கார்  37

வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸ் 23/0

தமீம் இக்பால்    16
இம்ருல் கெய்ஸ்    7

இந்த போட்டியில் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

வரும் 18ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply