shadow

maruti suzuki--621x414இதுவரை  டீசலுக்கு இருந்த கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. டீசல் மீதான கட்டுப்ப்பாட்டை நீக்கியதற்கு ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த தொழிலதிபர்கள் வரவேற்றுள்ளனர். சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இனி டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதால் ஆட்டோமொபைல் துறை சிறப்பான வளர்ச்சியை அடையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் டீசலின் விலையை பொறுத்து இனி ஆட்டோமொபைல் துறையினர் புதிய உத்திகளை வகுக்க முடியும் என்று மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹுன்டாய் நிறுவனத்தின் விற்பனை பிரிவுத் துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவத்ஸவா அவர்கள், “பெட்ரோல், டீசல் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அரசின் நிலைப்பாடு தெளிவாகியுள்ளது. இதனால் வாகனங்கள் தயாரிப்பு குறித்து திட்டமிட ஏதுவாகியுள்ளது என்று  கூறியுள்ளார்.

முன்னதாக டில்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை விலக்கி கொள்வதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இனிமேல் சர்வதேச விலைக்கு ஏற்ப டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் என கூறினார். இதன் மூலம் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும். பெட்ரோல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயித்து வருகின்றன என்பது  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply