shadow

cricket 1 இலங்கை அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியல் நேற்று அதிகாரபூர்வமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி:

1. இந்தியா        117 புள்ளிகள்
2. தென்னாப்பிரிக்கா    115 புள்ளிகள்
3. ஆஸ்திரேலியா        114 புள்ளிகள்
4. இலங்கை        108 புள்ளிகள்
5. இங்கிலாந்து        107 புள்ளிகள்
6. பாகிஸ்தான்        98  புள்ளிகள்
7. நியூசிலாந்து        97  புள்ளிகள்
8. மேற்கிந்திய தீவுகள்    96  புள்ளிகள்
9. வங்கதேசம்        69  புள்ளிகள்
10. ஜிம்பாவே        58  புள்ளிகள்

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. எஞ்சிய ஆட்டங்களின் முடிவை பொறுத்து இரண்டு அணிகளில் ஒன்று நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இதேபோல் வருகிற 26ஆம் தேதி தொடங்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 7 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முடிவு தர வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

cricket

Leave a Reply