shadow

modi and dilmaபிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று பிரேசில் அதிபரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-பிரேசில் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள பிரேசிலியா நகரில் நேற்று பிரேசில் அதிபர் தில்மா ரூசெப்புடன் இருநாட்டு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சமயத்தில் இரு நாடுகளிடையே சுற்றுச்சூழல், விண்வெளி, தூதரக ஆலோசனைகள், இயங்கும் தன்மை ஆகியவை தொடர்பான 3 முக்கிய ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். பிரேசிலியா நகரில் கட்டப்பட்டுள்ள புதிய இந்திய தூதரக கட்டடத்தையும் மோடி திறந்து வைத்தார்.
 
நேற்றுடன் பிரிக்ஸ் மாநாடு முடிவடைந்தது. அதன்பின்னர் பிரதமர் மோடி, பிரேசிலில் இருந்து புறப்பட்டு ஜெர்மனியில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை அவர் ஜெர்மனியில் இருந்து டில்லி புறப்படுகிறார்.

Leave a Reply