shadow

தொண்டு நிறுவனங்கள் மீது இந்தியா நடவடிக்கை. அமெரிக்க அதிபர் ஒபாமா எதிர்ப்பு

201512040548392330_Firing-on-aid-workers-in-the-United-States-Obama-condemned_SECVPFகிரீன்பீஸ் என்னும் தன்னார்வ தொடு நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு இந்தியா சமீபத்தில் தடை விதித்தது. கடந்த செப்டம்பர் மாதம் அந்த தொண்டு நிறுவனத்தின் பதிவையும் இந்தியா ரத்து செய்தது. இதே போன்று இன்னும் ஒருசில தொண்டு நிறுவனங்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் “சிவில் சங்கங்கள், சமூகத்தை வலுப்படுத்துகின்றன. அவற்றை ஆதரிக்க வேண்டியது அவசியம். அவற்றை நசுக்கக்கூடாது” என குறிப்பிட்டார்.

‘கிரீன்பீஸ்’ தன்னார்வ தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாக கொண்டு உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply