shadow

இந்திரா காந்தியின் கடைசி ஆசையை நிறைவேற்ற சோனியா காந்தி மறுப்பு?

priyankaமறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தனது பேத்தி பிரியங்கா காந்தியை அரசியல் வாரீசாக மாற்ற முயன்றதாகவும், ஆனால் சோனியா காந்தி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் இந்திரா காந்தியின் ஆலோசகர் மதன்லால் பொதேதார் என்பவர் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலத்திற்கு ஓய்வு எடுக்க சென்றிருந்ததாகவும், அப்போது அவர் தன்னுடைய வாழ்க்கை கூடிய சீக்கிரம் முடியவுள்ளதாகவும், அதற்குள் பிரியங்கா காந்தியை தனது அரசியல் வாரீசாக்க வேண்டும் என அவர் விரும்பியதாகவும் மதன்லால் பொதேதார் தனது சினார் லீவ்ஸ்’ என்ற புத்தககத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்திரா காந்தி கூறியது போல், 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31–ம் தேதி கொல்லப்பட்டார். இந்திராவின் ஆசை குறித்து 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு, சோனியாவுக்கு தான் கடிதம் எழுதியதாகவும் ஆனால், அதற்கு சோனியா இப்போது வரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply