shadow

  spainமொராக்கோ நாட்டில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சூட்கேஸ் மூலம் 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட இருந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஸ்பெயினில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மொராக்கோ நாட்டில் உள்ள செயுத்தா என்ற விமான நிலையத்தில் கையில் சூட்கேசுடன் வந்த 19வயது இளம்பெண் மீது சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள் அவருடைய சூட்கேசை திறந்து சோதனை செய்தனர். சூட்கேசின் உள்ளே 8 வயது சிறுவன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

spain 2

சிறுவனை கடத்திய இளம்பெண்ணை கைது செய்து விசாரணை செய்த போலீஸார் இதற்கு சிறுவனின் தந்தையும் உடந்தை என்பதை அறிந்து அவரையும் கைது செய்தனர். இவர்கள் சட்டவிரோதமாக மொரக்கோவில் இருந்து ஸ்பெயினுக்கு குடியேற முயன்றதாக விசாரணையில் தெரிய வந்தது.

ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக ஸ்பெயின் நாட்டிற்கு ஊடுருவம் சம்பவம் அதிகரித்து வருவதாகவும் இதனால் ஸ்பெயின் பெரும் பிரச்சனை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2014 -ம் ஆண்டில் மட்டும் சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சி செய்தனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 5 ஆயிரம் பேர் வெற்றிகரமாக ஸ்பெயின் நாட்டிற்குள் ஊடுருவிவிட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் 3 ஆயிரம் பேர் ஊடுருவி உள்ளனர்.

சிறுவன் கடத்தப்பட்டது, ஸ்கேனிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் உலக மீடியாக்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

spain 1

Leave a Reply