shadow

சென்னையில் மேலும் மழையா? வானிலை முக்கிய அறிவிப்பு
weather
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் வானிலை அறிவ்ப்ப்பு வெளிவந்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 2 நாட்களில் வலுவிழந்து தமிழகத்தில் மழை படிப்படியாகக் குறையும் என வானிலை ஆய்வு மையம் சற்று முன்னர் கூறியுள்ளதால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தற்போது வலுவடைந்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலு குறைந்து தாழ்வு நிலையாக மாறும். அந்த தாழ்வு நிலையும் அடுத்த 48 மணி நேரத்தில் வலு இழந்துவிடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று முன்தினம் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூரில் அதிகபட்சமாக 13 செ.மீட்டர் மழையும் அதற்கு அடுத்த படியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 12 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறினார்.

இதற்கிடையே சென்னையில் நேற்று முன்தினம் மாலையிலிருந்து வெறித்திருந்த மழை நேற்றிரவு முதல் மீண்டும் தொடர்ந்தது. இரவில் விட்டுவிட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. சென்னையில் இன்று காலை 11.00 அளவில் மழை, வெயில் என மாறி மாறி அடித்து வருகிறது.

English Summary: Important weather report for Chennai

Leave a Reply