இந்தியா – இந்தோனேஷியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் கல்வி, கலாசாரம், சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, போலி மருந்துகளை தடுப்பது உள்ளிட்ட 6 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.பிரதமர் மன்மோகன் சிங் முதல்முறையாக இந்தோனேஷியாவுக்கு நேற்று வந்தார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பல்வேறு துறையில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையே பொருளாதாரம், வர்த்தக உறவுகளை அதிகரிப்பது குறித்து விவாதித்தனர்.

ஒப்பந்தம்:
இதையடுத்து 6 முக்கிய ஒப்பந்தங்கள் பிரதமர் மன்மோகன் முன்னிலையில் கையெழுத்தாயின. குறிப்பாக மருத்துவம் தொடர்பான ஒப்பந்தப்படி போலி மருந்துகளை கட்டுப்படுத்துவது, குழந்தைகள், கர்ப்பிணிகள் நலம், பாரம்பரிய மருந்துகளில் போலியை தடுப்பது, தொற்று மற்றும் தொற்றில்லா நோய்களுக்கு எளிய மற்றும் உடனடி தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கும். மேலும், பேரிடர் மேலாண்மை, கல்வி, வர்த்தகம் உள்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

Leave a Reply