shadow

வடிவேலுவை அடுத்து பலிகடாவாகும் இமான் அண்ணாச்சி?
imman-annachi
கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் மிகவும் தீவிரமாக திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வைகைப்புயல் வடிவேலு, அதன்பின்னர் இப்போதுவரை எழுந்து நிற்க முடியாத நிலை உள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிராகவும், விஜயகாந்துக்கு எதிராகவும், அவர் பேசிய பேச்சு திரையுலகினரையே அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்க கோலிவுட் திரையுலகினர் தயங்கினர்.

இந்நிலையில் கடந்த தேர்தலில் வடிவேலு பலிகடா ஆனதுபோல் இந்த தேர்தலிலும் ஒரு கோலிவுட் நடிகர் பலிகடா ஆகியுள்ளார். அவர்தான் வளர்ந்து வரும் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி.

இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேர்ந்து கொண்ட இமான் அண்ணாச்சி, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்யவுள்ளாராம். ஒருவேளை மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்தால் திரையுலகில் இருந்து இமான் அண்ணாச்சி ஒதுக்கப்படுவார் என கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a Reply