shadow

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆனதை அடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்

சிபிஐ அதிகாரி அஞ்சலி விக்ரமாதித்தன் என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்த திரைப்படம் இமைக்கா நொடிகள்

இந்த படத்தில் அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் உள்பட பலர் நடித்து இருந்தார் என்பதும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்