shadow

பிரபல ஹாலிவுட் நடிகைக்கு நன்றி தெரிவித்த மலாலா
malala
உலக தலைவர்கள் முன்னர் ஐ.நாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன், தான் ஒரு பெண்ணியவாதி என்றும் பெண்ணியவாதி என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதையும் விளக்கினார். இந்நிலையில் நடிகை எம்மா வாட்சனின் உரையை கேட்ட பின்னர்தான் ‘என்னை பெண்ணியவாதி என்று அழைத்துக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதை அறிந்து கொண்டேன்’ என்று நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா கூறியுள்ளார்.

மலாலா குறித்த ஆவணப்படம் ஒன்று லண்டனில் திரையிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட மலாலா பேசியதாவது, “பெண்ணியவாதி என்பது ஒரு சிக்கலான வார்த்தை. நான் முதன்முதலில் இந்த வார்த்தையை கேட்ட போது எதிர்மறைக் கருத்துகள் எழுந்தன. சில நேர்மறைக் கருத்துகளும் எழுந்தன. எனவே நான் ஒரு பெண்ணியவாதியா இல்லையா என்பதைக் கூற தயக்கம் ஏற்பட்டது.

அதன் பிறகு நடிகை எம்மா வாட்சன் ஐ.நா.வில் பேசிய பேச்சைக் கேட்ட பிறகு பெண்ணியவாதி என்று என்னை அழைத்துக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதை அறிந்து கொண்டேன். எனவே, நான் ஒரு பெண்ணியவாதி, நாம் அனைவரும் பெண்ணியவாதியாக இருப்பது அவசியம், ஏனெனில் பெண்ணியவாதம் என்பது சமத்துவம் என்பதற்கு மற்றொரு வார்த்தை” என்று கூறியுள்ளார்.

மலாலாவுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் கருத்து கூறிய நடிகை எம்மாவாட்சன், “பெண்ணியவாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதற்கு அவ்வளவு சுலபமான வார்த்தை அல்ல, ஆனால் மலாலா தைரியமாக அதனை தெரிவித்துள்ளார். இந்த நாளில் எனக்கு நெகிழ்ச்சி அளிக்கும் தருணம் இது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply