அஜீத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடலை ரசித்தாரா இளையதளபதி விஜய்? சுவாரசியமான தகவல்
vijay vedhalam 1
அஜீத், விஜய் ரசிகர்கள் டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் மோதிக்கொண்டாலும், அஜீத்தும் விஜய்யும் எப்பொழுதும்போல நண்பர்களாக இருப்பதாக பல நேரங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. அஜீத் படம் வெளியாகும்போது தொலைபேசியில் விஜய் பாராட்டுவதும், விஜய்யின் படங்களுக்கு அஜீத் பாராட்டுவதும் இருவருக்கும் இடையே மட்டும் நடைபெறும் ரகசிய உரையாடல்கள்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான அஜீத்தின் ‘வேதாளம்’ படத்தின் டீசரை விஜய் படப்பிடிப்பின்போது பார்த்து பாராட்டியதாக டுவிட்டரில் ஒருவர் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். குறிப்பாக அஜீத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடலை விஜய் மிகவும் ரசித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ‘வேதாளம்’ டீசரை விஜய் பார்க்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்றும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த புகைப்படம் போலியானது என்றும், மனோபாலாவின் தயாரிப்பில் வெளிவந்த ‘சதுரங்கவேட்டை’ படத்தின் டிரைலரைத்தான் விஜய் பார்த்ததாகாவும், அதில் ‘வேதாளம்’ புகைப்படத்தை போட்டோஷாப் மூலம் ஒட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றில் எது உண்மை என்று தெரியாமல் அஜீத்-விஜய் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *