shadow

இளையதளபதி விஜய்க்கு கூகுள் நிறுவனத்தால் கிடைத்த கெளரவம்

vijay59உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இவ்வருடத்தில் கூகுள் தேடுதளம் மூலம் அதிக நபர்களால் தேடப்பட்டவர்கள் பட்டியல் ஒன்று தற்போது கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பெரும்பாலான நாடுகளில் அதிகம் தேடப்பட்டவர் என்ற பெருமையை பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகை கிம் கர்தர்ஷியான் தேர்வு பெற்றுள்ளார். இவர் மொத்தம் 26 நாடுகளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இவரை அடுத்து பிரபல கால்பந்து வீரர்கள் மெஸ்ஸி மற்றும் ரொனல்டோ ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் இந்திய அளவில் அதிகம் கூகுளில் தேடப்பட்டவர்  பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் பாகிஸ்தான், பங்களாதேஷ், பொலிவியா, நேபாளம் ஆகிய 4நாடுகளில் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளராக உள்ளார்.

இந்நிலையில் இந்த பட்டியலில் நமது இளையதளபதி விஜய்க்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டைநாடாகிய இலங்கையில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் விஜய்க்கு முதலிடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிக்கும் படங்கள் அனைத்துமே தமிழகத்தை போலவே இலங்கையிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே

Chennai Today News: Ilayathalapathy Vijay got first place in Sri Lanka on Google search

Leave a Reply