shadow

விஜய்யின் உதவியை பெற்ற மற்றொரு பிரபல ஹீரோ

vikranthமூன்று வருடங்களாக ரிலீஸாகாமல் மூலையில் முடங்கியிருந்த சிம்புவின் “வாலு” படம் இளையதளபதி விஜய்யின் முயற்சியால் ரிலீஸாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சிம்புவை அடுத்து நடிகர் விக்ராந்துக்கும் விஜய் தற்போது சத்தமில்லாமல் ஒரு உதவி செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விக்ராந்த் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள ‘தாக்க தாக்க’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகவேண்டும் என்றால் வித்தியாசமாக விளம்பரம் செய்ய வேண்டும் என முடிவு செய்த அந்த படத்தை ரிலீஸ் செய்யும் கலைப்புலி எஸ்.,தாணு, இந்த படத்தை இளையதளபதி விஜய்க்காக சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த படத்தை பார்த்துவிட்டு படத்தையும், விக்ராந்த் நடிப்பையும் விஜய் புகழ்ந்துள்ளார்.

முதல்பாதியின் திரைக்கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இரண்டாவது பாதியில் விக்ராந்தின் நடிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கருத்து தெரிவித்தார். விஜய்யின் இந்த விமர்சனத்தால் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். விக்ராந்த், விஜய்யின் நெருங்கி உறவினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply