ilaiyarajaஇசைஞானி இளையராஜா உடல்நலக்கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று பூரண நலமுடன் வீடு திரும்பியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு வழக்கமாக செய்யப்படும் ஒருசில பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இளையராஜாவின் கோடானு கோடி ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

இந்த தகவலை இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் அவர்களின் மகன் இயக்குனர் வெங்கட்பிரபு உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது “இசைஞானியின் எல்லா ரசிகர்களுக்கும் ஒரு செய்தி. ராஜா அப்பா நலமுடன் உள்ளார். இது பொதுவான செக் அப்தான். சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவர் இன்று  வீடு திரும்பினார்” என பதிவிட்டுள்ளார்.

வெங்கட்பிரபுவின் டுவிட்டர் செய்தியை அடுத்து மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து பதிவுகளை செய்து வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *