shadow

ilaiyarajaகடந்த 40 ஆண்டுகளாக இசைத் துறையில் பல சாதனைகளைப் புரிந்து 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இசைஞானி  இளையராஜா,  தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி ஒன்றை நடத்துகிறார்.

இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அவர் இசையமைத்த படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையாக வைத்து இந்த போட்டியை நடத்துகிறார்.

போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குநர், பாடியவர்கள், தயாரிப்பாளர்கள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்தால் போதுமானது.

அவ்ர் கேட்கும் கேள்விகளூக்கு முழு விவரங்களையும் யார் மிகச்சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. ரசிகர் திரட்டித் தரும் தகவல்களை, இளையராஜாவிடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால் பரிசு தரப்படும்.

சரியான தகவல்களைத் திரட்டித் தரும் ரசிகரை, இளையராஜாவே நேரில் அழைத்து பரிசுகளை வழங்க முடிவு செய்துள்ளார்.. என்ன பரிசு, எந்தத் தேதியில் போட்டி என்பதையெல்லாம் இளையராஜாவே விரைவில் அறிவிக்க உள்ளார்.

Leave a Reply