shadow

கருப்பு பணத்தின் உதவியால் பசுக்களை காப்பாற்றுவேன். பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை கருத்து
bjp mla
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பில் ஏற்றதில் இருந்தே பாஜகவின் முக்கிய தலைவர்களில் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவிட்டு சமூக வலைத்தளங்களில் வாங்கி கட்டிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தின் ராம்கார்க் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருக்கும் கயந்தேவ் அகுஜா என்பவர் கருப்புப்பணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். கருப்புப்பணம் வைத்துள்ளவர்கள் என்னிடம் அந்த பணத்தை கொடுத்தால் அதற்கு ரசீது தர தயாராக உள்ளதாகவும் அந்த பணத்தின் மூலம் ஏழைப்பெண்கள் திருமணம் மற்றும் பசுக்களை காப்பற்ற பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருப்புப்பணம் கைப்பற்றப்பட்டால் அது அரசின் கஜானாவில் போய்ச்சேர வேண்டும் என்ற நிலையில் அந்த பணத்தை தனிப்பட்ட எம்.எல்.ஏ ஒருவர் செலவு செய்ய போவதாக அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே இவர் சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மாணவர் போரட்டம் நடந்து கொண்டிருந்தபோது அந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆணுறைகளும், கருக்கலைப்பு ஊசிகளும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply