shadow

நான் போட்டியிருந்தால் டிரம்ப்பை தோற்கடித்திருப்பேன். ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று வரும் ஜனவரி 20ஆம் தேதி புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஒபாமா, ”அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால் நிச்சயம் அமெரிக்க மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்றிருப்பேன் என்று நினைக்கிறேன்’ என்று கூறினார். அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒபாமா அந்த பேட்டியில் கூறியபோது, “குடியரசுக் கட்சியினரால் பிரிவினையைத் தூண்டுவதில் மட்டுமே மும்முரம் காட்ட முடிந்தது. ட்ரம்ப்பின் வெற்றியானது சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் திறந்த மனத்துடன் அணுகும் ஒரே அமெரிக்கா என்ற கனவை பொய்த்துப் போனதாக ஆக்கிவிடாது’ என்று கூறினார்.

Leave a Reply