shadow

அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி. ராமதாஸ் நிபந்தனை
ramdoss
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதில் பாமக மட்டும் ஒரு வருடத்திற்கு முன்பே முதல்வர் வேட்பாளர் அன்புமணி என அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. பாஜக கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்து வரும் பாமக, கூட்டணி கட்சிகளிடம் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முதல்வர் வேட்பாளரை அறிவித்தது பாஜக உள்பட மற்ற கட்சிகளை அதிருப்தி செய்திருக்கும் நிலையில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என ராமதாஸ் இன்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வை கண்டித்து இன்று பாமக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் ராமாதாஸ், ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்துவதாக கூறினார்.

மேலும் கூட்டணி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், “பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை ஏற்று வந்தால் பாரதிய  ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறியதோடு, மக்கள் நல கூட்டியக்கம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறினார்.

Leave a Reply