Chennai Today News

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவுக்கு டெபாசிட் போகும்: தினகரன்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவுக்கு டெபாசிட் போகும்: தினகரன்

நேற்று தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த கருத்து குறித்து டிடிவி தினகரன் கூறுகையில் அதிமுகவுக்கு தமிழகம் முழுவதும் டெபாசிட் போகும் அளவுக்கான ஒரு நல்ல யோசனையைத்தான் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு தமிழகம் முழுவதும் டெபாசிட் போகும், எனக்கு மதிப்பு உயரும்,. இத்தகைய நல்ல கருத்தை ராஜேந்திரபாலாஜி கூறியதை வரவேற்கின்றேன்’ என்று கூறியுள்ளார்

இந்த நிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக தினகரன் பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் சட்டமன்றத்தில் நான் தனியாள் இல்லை, அது எப்படி என்பதை பொறுத்திருந்து பாருங்கள்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!