shadow

சிம்பு-நயன்தாராவின் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் தேதி
simbu
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியபோதிலும், பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.

இந்த படத்தை ரிலீஸ் செய்யும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் நேற்று ஒரு புதிய புரமோ வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது. இந்த வீடியோவில் கண்டிப்பாக மே 20ஆம் தேதி வர்றோம்’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த படம் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆவது தற்போது உறுதியாகியுள்ளது.

பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். சிம்புவின் சகோதரர் குறளரசன் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply