shadow

டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியல்

cricket1இலங்கை -ஆஸ்திரேலியா, இங்கிலாந்து-பாகிஸ்தான், இந்தியா -மேற்கிந்திய தீவுகள் ஆகிய டெஸ்ட் தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தரவரிசை அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனதால் பாகிஸ்தான் அணி 111 புள்ளிகள் பெற்று முதலிடத்தை கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை இந்தியா வென்றிருந்தாலும் ஐந்தாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் இந்தியாவுக்கு 110 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்தது.

முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் 108 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், 95 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில்தான் உள்ளது.

மேலும் இங்கிலாந்து 4வது இடத்திலும், நியூசிலாந்து 5வது இடத்திலும், தென்னாப்பிரிகா 7வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 8வது இடத்திலும்,
வங்கதேசம் 9வவது இடத்திலும், ஜிம்பாவே கடைசி இடைத்திலும் உள்ளது

Leave a Reply