shadow

viratசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி தென்னாப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ் முதலிடத்திலும், இலங்கையின் சங்கரகரா இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஆம்லா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் இந்தியாவின் விராத் கோஹ்லி, ஐந்தாவது இடத்தில் இலங்கை அணியின் தில்ஷன், ஆறாவது இடத்தில் இந்திய வீரர் ஷிகார் தவான் ஆகியோர் உள்ளனர்.

மேலும் ஏழாவது இடத்தில் நியூசிலாந்து நாட்டின் வில்லியம்சன், எட்டாவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் தோனி, ஒன்பதாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், பத்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் பெய்லி ஆகியோர் உள்ளனர்.

இதே போல் பந்து வீச்சிலும் டாப் 10 வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி
1. ஸ்டார்க் (ஆஸ்திரேலியா
2. இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா)
3.சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்)
4. ஸ்டெய்ன் (தென்னாப்பிரிக்கா)
5. நரின் (மேற்கிந்திய தீவுகள்)
6. பெளல்ட் (நியூசிலாந்து)
7. ஜான்சன் (ஆஸ்திரேலியா)
8. ஆண்டர்சன் (இங்கிலாந்து)
9. மோர்க்கல் (தென்னாப்பிரிக்கா)
10. ஷபிக் அல் ஹாசன் ( வங்கதேசம்)

Leave a Reply