shadow

ibmகடந்த சில நாட்களுக்கு முன்னர் 5000 ஐ.டி. ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனம் வீட்டுக்கு அனுப்பிய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் ஐ.டி.ஊழியர்கள் மீண்டு வராத நிலையில் தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம். நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்று ஐ.பி.எம். நிறுவனம். இந்த நிறுவனம், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல நாடுகளில் கிளைகள் அமைத்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 4 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், ஐபிஎம் நிறுவனம் சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக போர்ப்ஸ் இணையதளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நீக்கம் இன்னும் ஒருசில நாட்களில் படிப்படியாக நடைபெறும் என்றும் இதில் அதிக பாதிப்பு இந்திய ஊழியர்களுக்குத்தான் என்றும் அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இதனால், ஐ.பி.எம். ஊழியர்கள் மத்தியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த செய்திக்கு ஐ.பி.எம். நிறுவன செய்தி தொடர்பாளர் இயான் கூலே மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply