shadow

ரஜினி, அஜித், விஜய்யை தோற்கடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். புதிய கருத்துக்கணிப்பு

electionதமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. ஊடகங்களும் அடுத்த முதல்வர் யார்? என்பது குறித்த கருத்துக்கணிப்பை ஆரம்பித்துவிட்டன. ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் முதல்வர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில் நியூஸ் 7 செய்தி தொலைகாட்சி மேற்கண்ட ஐந்து பேர்களை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளருக்கு தகுதியானவர் என்பது குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளது. புதிய முதல்வர் வேட்பாளராக ஐஏஎஸ் அதிகாரி சகாயம், ரஜினி, விஜய், அஜித், டிராபிக் ராமசாமி, ஆகியோர்களுடன் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரி அல்லது மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சி போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இவற்றில் முதலமைச்சர் வேட்பாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு 4 சதவீதம் பேரும், நடிகர் விஜயக்கு 2.7 சதவீதம் பேரும் கருத்துக் கணிப்பில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேபோல், நடிகர் ரஜினிக்கு 1.5 சதவீதம் பேரும், நடிகர் அஜித்திற்கு 0.2 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு 0.8 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹிட்லரை போன்ற தலைவர் தேவை என 0.1 சதவீதம் பேரும், பழைய மன்னராட்சி முறைக்கு 0.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக்கு 0.2சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

Leave a Reply