shadow

முதல்வரை நேரில் சந்தித்தார் ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகன்

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகன் சற்று முன்னர் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்தார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஞானதேசிகன், தன்னுடைய இடைநீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஞானதேசிகன் இடைநீக்கத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் தற்போது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண் கல்வி நிறுவன இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவியை ஞானதேசிகன் இன்று ஏற்றுக்கொண்ட நிலையில் சற்றுமுன் மரியாதை நிமித்தமாக, முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அவர் பன்னீர்செல்வத்திற்கு, ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தொடர்ந்தால் வெளியாட்களின் தலையீடு இருக்காது என்று பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கருதுவதால் அதிகாரிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply