ரூ.500 கோடி திருமணம் தெரியும். ரூ.500 திருமணம் தெரியுமா?


ias-coupleகர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் சமீபத்தில் ரூ.500 கோடிக்கும் மேல் செலவு செய்து நடத்தப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு திருமணம் வெறும் ரூ.500 செலவில் நடந்துள்ளது. இந்த திருமணத்தின் காதல் ஜோடி இருவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுத்தர வர்க்கத்து மக்கள் கூட கடன் வாங்கி தங்கள் தகுதிக்கு மீறி செலவு திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நல்ல வசதியுடன் உள்ள இந்த காதல் ஜோடியின் எளிய திருமணம் அனைவரையும் கவர்ந்தது.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று மத்தியபிரதேச மாநிலம் கோகத் துணை ஆட்சியராக பணிபுரியும் ஆசிஷ் வசிஷ்டாவும், அதே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தெலுங்கானா மாநிலம் விஜயவாடாவில் துணை ஆட்சியராக பணியாற்றி சலோனியும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இவர்களது திருமணம் கடந்த திங்கட்கிழமை ராஜஸ்தானில் மிக எளிமையாக நெருங்கிய உறவினர்கள் மத்தியில் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மொத்த செலவே ரூ.500 மட்டும்தான்

இந்த திருமணத்தை செய்து வைத்த மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் இளையராஜா அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அனைவரும் இதே வழியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ias-couple-1

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *