சட்டமன்ற தேர்தலில் நிற்க மாட்டேன். க.அன்பழகன்

anbazhaganதிமுகவில் கருணாநிதியை விட வயதில் மூத்தவரும், பழம்பெரும் அரசியல்வாதியுமான பேராசிரியர் க.அன்பழகன் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதை அடுத்து ஒரு பக்கம் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் பேராசிரியர் அன்பழகனும் கடந்த சில வாரங்களாக திருப்பூர், வேலூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

கடந்த 29-ம் தேதி திருச்சி தேவர் மன்றத்தில் தி.மு.க எம்.பி-யும், தி.மு.க கொள்கைப்பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் 60-வது பிறந்தநாள் விழாவும் அவருடைய, ‘நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள்’, ‘மேனகாவின் நம்பிக்கை’, சிவாவின் பிள்ளைகள் எழுதிய, ‘அன்புள்ள அப்பா’ உள்ளிட்ட புத்தகங்கள் வெளி யீட்டுவிழாவில் அன்பழகன் கலந்துகொண்டார்.

இந்நிலையில் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்த க.அன்பழகன் இந்த தேர்தலில் தான் நிற்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். வயது காரணமாக அன்பழகன் இந்த தேர்தலில் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதே போன்ற முடிவை இவரைவிட ஒரு வயது மட்டுமே குறைவாகவுள்ள கருணாநிதியும் எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *