18காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் திக்விஜய் சிங் தொலைக்காட்சி பெண் நிருபர் அம்ரிதா சிங் உடன் காதல் கொண்டிருப்பதாகவும், அவரை  விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திக்விஜய் சிங் திருமணத்தில் பாலிவுட் நடிகை சன்னிலியோன் நடனம் ஆடினால் ரூ.1 கோடி, காங்கிரஸ் கட்சிக்கு நிதி தருவேன் என நடிகர் கமால் கான் தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமால்கானின் இந்த அறிவிப்புக்கு சன்னிலியோனின் வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கமால்கானுக்கு எதிராக புகார் மனுவை கொடுத்துள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “கமால்கானுக்கு எதிராக புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர் போட்ட போதிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயங்குகின்றனர். போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போலீஸ் மீதும் வழக்கு தொடுப்பேன் என எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே கமால்கானின் மீது கடந்த 2013ஆம் ஆண்டு சன்னிலியோன் சார்பில் ரிஸ்வான் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

18a

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *