விடுதலைப்புலிகளின் கொள்கைகளை உலகம் முழுவதும் அழிப்பேன். சிறிசேனா

sirisena_2300037fஇலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பல்வேறு சலுகைகளை சிறிசேனா அளித்து வந்த போதிலும் விடுதலைப்புலிகள் விஷயத்தில் அவர் ராஜபக்சே போலவே நடந்து கொள்கிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிறிசேனா, உலகம் முழுவதும் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை அழிக்காமல் ஓய மாட்டேன்’ என்று சூளுரைத்துள்ளார்.

இலங்கையின் கொழும்பு நகருக்கு அருகே தெஷிவளை என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, ”ஒரு நாடு, ஒரு இனம் என்ற ரீதியில் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சமூக அமைப்பினை நிலை நாட்டுவதற்காக, சமயத் தலைவர்களினதும் வழிகாட்டல் சிறப்பாக கிடைக்கப் பெற்று வருகிறது

யுத்த ரீதியாக விடுதலைப் புலிகள் தோல்வியுற்ற போதிலும், கொள்கை ரீதியில் அவர்கள் இன்னும் தோல்வி அடையவில்லை. விடுதலைப் புலிகளின் கொள்கைகளை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பலர் இன்னும் பின்பற்றி வருகின்றனர்.

அதனால், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அழித்தொழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விடுதலைப் புலிகளின் கொள்கைகள் உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும், அவற்றை அழிக்காமல் விடப்போவதில்லை.

நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், உலகத் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். அதைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஒழிக்கப்போகிறேன்”

இவ்வாறு சிறிசேனா ஆவேசத்துடன் பேசினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *