shadow

அஜித்தை வைத்து அரசியல் படம் இயக்குவேன். ஹாலிவுட் இயக்குனர் பேட்டி

அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தை வைத்து அரசியல் படம் ஒன்றை இயக்குவே என ராஜ்திருசெல்வன் என்ற இயக்குனர் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் தமிழரான இவர் தற்போது ‘Lake of fire’ என்ற ஆங்கில படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ராஜ்திருசெல்வன், அஜித்துக்காகவே ஒரு அரசியல் படத்தை தயார் செய்து வைத்துள்ளேன். இந்த படம் தமிழக அரசியலை இதுவரை இல்லாத அளவில் தோலுரித்து காட்டும் வகையில் இருக்கும். இந்த படத்தின் கதையை அஜித்திடம் கூறியுள்ளேன். விரைவில் நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கின்றேன்’ என்று கூறியுள்ளார்

Leave a Reply