shadow

இவர்தான் உண்மையான காதல் மன்னன். இவருக்கு 2084 காதலிகள்

வடமேற்கு இங்கிலாந்து பகுதியை சேர்ந்த 79 வயது நபர் ஒருவருக்கு 2084 காதலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ‘லேடீஸ் மேன்’ என்று அழைக்கப்படும் இவர் தான் உண்மையான ‘காதல் மன்னன்’ என்று பலர் டுவிட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கிரிஸ் கள்ளிட்டன் என்ற 79 வயது நபர் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். தனக்கு பெண்கள் என்றால் சிறு வயது முதலே விருப்பம் என்றும் இதுவரை 2084 பெண்களை காதலித்து அவர்களிடம் உறவு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது பெண்கள் இல்லாமல் தனியாக வாழ்வதாகவும் தனது ஒரே பொழுதுபோக்கு மீன்பிடித்தல் என்றும் அவர் கூறியுள்ளார். பெண்களுடன் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தது குறித்து அவர் கூறும்போது, பெண்கள் எப்போதுமே தொல்லையானவர்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply