shadow

தோனியால்தான் இந்திய அணியில் எனது இடத்தை இழந்தேன்: தினேஷ் கார்த்திக்

தோனி போன்ற ஜாம்பவானால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் எனது இடத்தை இழந்தேன். இது எனக்கு இழப்பு தான் என்றால் இன்னொரு பக்கம் பெருமப்படுகிறேன் என்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு தனது 19வது வயதில் இந்திய அணியில் சேர்க்கபப்ட்டார். அதன்பின்னர் டோனி முதன்முறையாக ஒருநாள் போட்டியில் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காள தேச அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக களம் இறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே, 2005-ம் ஆண்டு டிசம்பர் மாமத் 2-ந்தேதி சென்னையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

அதன்பின் தலைசிறந்த வீரராக மாறியதால் தினேஷ் கார்த்திக் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்தான் சகா டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

தற்போது சகா காயம் அடைந்துள்ளதால் தினேஷ் கார்த்திக் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். தினேஷ் கார்த்திக் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

சாதாரண வீரரால் எனக்கு இந்திய அணியில் இடம்கிடைக்காமல் போகவில்லை. ஒரு ஜாம்பவான் வீரரால் இடம் கிடைக்காமல் போனது என்று தினேஷ் கார்த்திக் பெருமையுடன் கூறியுள்ளார்.

Leave a Reply