shadow

இந்த தேர்தல் எனக்கு ஒரு நல்ல பாடம். ஹிலாரி கிளிண்டன்

hilariஅமெரிக்க அதிபர் தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று தெரிவித்த நிலையில் அதிர்ச்சி தரும் வகையில் அவர் தோல்வி அடைந்தார். இந்த தோல்வி அவரை நிலைகுலைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுக்கு பின் கடந்த சில நாட்களாக வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ஹிலாரி நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் தனது தோல்விக்கான காரணம் குறித்து மனம்விட்டு பேசினார்.

பெரும்பாலான அமெரிக்கர்கள் தனக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் கடைசி நேரத்தில் அமெரிக்க புலனாய்வுதுறை தலைவர் இமெயில் விவகாரத்தில் எடுத்த முடிவே தனது தோல்விக்கு காரணம் என்று கூறிய அவர் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்வது எளிதானதாக இல்லை என்றும் ஆனாலும் தேர்தல் மூலம் அமெரிக்க மக்களின் ஆன்மாவை புரிந்து கொண்டதாகவும், இந்த தேர்தல் தனக்கு ஒரு நல்ல பாடத்தை கற்று கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் டொனால்டு டிரம்புக்கு நாட்டை தலைமையேற்று வழிநடத்தி செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் மதிப்புமிக்க தேசமான அமெரிக்காவின் மதிப்பை ஒருபோதும் இழக்க கூடாது என்றும் நாட்டின் மீது நம்பிக்கை வைத்து, நாட்டின் மரியாதைக்காக அனைவரும் எப்போதும் போராடுவோம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply