shadow

pilot son

மலேசிய விமானம் MH370 கடலில் விழுந்து அதில் பயணம் செய்த 239 பயணிகளும் மரணம் அடைந்துவிட்டதாகவும், இந்த விபத்திற்கு அந்த விமானத்தின் பைலட்தான் காரணம் என்றும் பரவலாக அனைத்து ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டு வரும் வேளையில், இன்று முதன்முதலாக பைலட்டின் இளையமகன் செய்தியாளர்கள் முன் தோன்றி பேட்டியளித்தார்.

எனது தந்தையை பற்றி எனக்கும் எனது குடும்பத்தினர்களுக்கும் மிக நன்றாக தெரியும் என்றும், ஊடகங்கள் சொல்வது போன்று எனது தந்தை எந்த விதத்திலும் விமான விபத்திற்கு காரணமாகி இருக்க மாட்டார் என்று தாங்கள் நம்புவதாகவும் கூறினார். கேப்டன்  Zaharie Ahmad Shah அவர்களின் குடும்பத்தில் இருந்து பேட்டி கொடுக்கும் முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

26 வயது அஹ்மத் சேத் என்ற இவர், இன்று காலை செய்தியாளர்கள் முன் தோன்றி பரபரப்பாக பேட்டியளித்தார். விமான விபத்தில் எனது தந்தையும்தான் காணாமல் போய் உள்ளார். எங்கள் குடும்பத்திற்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஊடகங்கள் என் தந்தையை பற்றியும், எங்கள் குடும்பத்தை பற்றியும் இஷ்டத்திற்கு விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆனாலும் அவருடைய குடும்பத்தினர்கள் தற்போது எங்கு உள்ளார்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Leave a Reply