என்னால் பிரதமர் ஆக முடியும்: ஸ்ரீதேவி மகள் பதிலால் அதிர்ச்சி

சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ‘என்னால் பிரதமர் ஆக முடியும் என்று நினைப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மராத்தியில் சூப்பர் ஹிட் ஆன ‘சாய்ரத்’ என்ற திரைப்படத்தின் இந்தி பதிப்பில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அறிமுகமாகிறார். ‘தடக்’ என்ற பெயரில் உருவாகிவரும் இந்த படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இஷான் கட்டார், ஜான்வி நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடந்தது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் “உங்கள் இருவரில் யாரால் இந்திய பிரதமர் ஆக முடியும்?” என கட்டார், ஜான்வி ஆகியோர்களை பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினார்.

அப்போது சற்றும் தாமதிக்காமல் ஜானவி கபூர், “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என பதில் அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் உடனே ஜானவி சுதாரித்துக்கொண்டார். “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். தயவு செய்து பத்திரிகைகளில் போட்டு விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஜான்விக்கு மனதில் பிரதமர் ஆசை உள்ளது என்றே அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *