shadow

தல படத்தின் முதல் காட்சியை விசிலடித்து பார்ப்பேன். ரேஷ்மி மேனன்
reshmy
தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹா மற்றும் நடிகை ரேஷ்மி மேனனின் காதல் கனிந்து இரு வீட்டார்களின் சம்மதத்துடன் வரும் 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ரேஷ்மி மேனன், தனது நிச்சயதார்த்ததிற்கு இரண்டு நாள் கழித்து ‘தல அஜீத்தின் ‘வேதாளம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், அதனால் தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு தீபாவளி தினத்திலும் ரிலீஸ் ஆகும் படத்தை முதல் நாள் முதல் காட்சி நண்பர்களுடன் பார்க்கும் வழக்கம் தன்னிடம் இருந்து வருவதாகவும், அதேபோல் இவ்வருடமும் சென்னையில் ‘வேதாளம்’ திரையிடப்படும் ஏதாவது ஒரு தியேட்டரில் தன்னை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தல படத்தின் முதல் காட்சியை விசிலடித்து நண்பர்களுடன் பார்க்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடன் தல படத்தை பார்க்க பாபிசிம்ஹாவும் வருவாரா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply