ஜெயலலிதா மரணம் எனக்கே சந்தேகம் அளிக்கிறது. சென்னை ஐகோர்ட் நீதிபதி

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய சசிகலா தரப்பினர்களும், தமிழக அரசும் இதுவரை எவ்வித விளக்கங்களும் வெளியிடவில்லை.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கே சந்தேகம் இருப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தனது சொந்த கருத்தாக வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. ‛அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார்’ என, செய்திகள் வெளியாகின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *