shadow

சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? எனக்கு சந்தேகமாக உள்ளது. மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும் என்றும் சட்டப்பேரவை செயலர் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அதிமுகவில் தற்போது நிலவும் குழப்பத்தை பார்த்தால், சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடக்குமா என சந்தேகமாக இருப்பதாக திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் தேர்தல் நடந்து ஜனநாயக முறைப்படி ஆட்சி மாற்றம் ஏற்படுவதை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், விரைவில் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை பெசன்ட்நகர் இல்லத்தில் டிடிவி தினகரனுடன் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம்,செய்யாறு மோகன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை செய்து வருவதாகவும், சட்டப்பேரவை கூட்டத்தின்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply