shadow

vijay and simbuyநடிகர் சிம்பு, அஜீத்தின் தீவிர ரசிகர் என்பதும் அவருடைய படங்கள் ரிலீஸாகும் நாளில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்ப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சிம்பு அளித்த பேட்டின் ஒன்றில் அஜீத் படங்களை பார்ப்பதுபோல் ஏன் விஜய் படங்களை பார்ப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த சிம்பு, “தல அஜீத்தின் படத்தை பார்ப்பது போன்ற ஒரு உற்சாகம் வேறு யாருடைய படங்கள் பார்த்தாலும் கிடைக்காது.

எனக்கு அஜீத்தை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு விஜய்யையும் பிடிக்கும். ஆனாலும் நான் விஜய் படங்களை பார்ப்பதில்லை. அவருடைய படங்களை பார்த்தால், அவர் பாதிப்பு எனது படங்களிலும் வந்துவிடும் என்பதால் நான் விஜய் படங்களை பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

விஜய் படங்களை நான் பார்ப்பதில்லை என்பதற்காக எனக்கு விஜய்யை பிடிக்காது என்பது அர்த்தமல்ல. மற்றவர்களை போல எனக்கு ஒளிவுமறைவாக பேசத்தெரியாது. அதனால் நான் தைரியமாக விஜய் படங்களை பார்ப்பதில்லை என்று கூறுகிறேன். நான் என்றுமே தல ரசிகர் என்று கூறிக்கொள்வதில்தான் பெரும் அடைகிறேன்.

Leave a Reply