shadow

10ஜனாதிபதி உத்தரவிட்டால் மட்டுமே பதவி விலகுவேன். மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபணிய மாடேன் என மகாராஷ்டிர மாநில கவர்னர் அதிரடியாக தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், காங்கிரஸ் ஆட்சியில் அமர்த்தப்பட்ட கவர்னர்களை மாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

முதல்கட்டமாக உத்தரபிரதேச கவர்னர் பி.எல்.ஜோஷி, மராட்டிய கவர்னர் கே.சங்கர நாராயணன் (கேரள காங்கிரஸ் தலைவர்) கேரள கவர்னர் ஷீலா தீட்சித் (டெல்லி முன்னாள் முதல்-மந்திரி), குஜராத் கவர்னர் கமலா பெனிவால், மேற்குவங்க கவர்னர் எம்.கே.நாராயணன் (முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர்), அசாம் கவர்னர் ஜே.பி.பட்நாயக், நாகாலாந்து கவர்னர் அஸ்வினிகுமார் ஆகியோர்களை மாற்ற முடிவு செய்தது.

இதில் உ.பி. கவர்னர் ஜோஷி மட்டுமே தானாகவே முன்வந்து ராஜினாமா செய்துள்ளார். மற்ற மாநில கவர்னர்கள் பதவி விலக மறுப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில்  மகாராஷ்டிர கவர்னர் சங்கர நாராயணன் நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ” கவர்னர் பதவி என்பது அரசியல் அமைப்பு பதவியாகும். அவர், ஜனாதிபதியின் பிரதிநிதி ஆவார். அவரை ஜனாதிபதிதான் நியமிக்கிறார். எனவே இதற்கு பொறுப்பில்லாத ஒருவர் என்னை பதவியில் இருந்து விடுவித்துக்கொள்ளும்படி கடிதம் எழுத வற்புறுத்த முடியாது. மேலும் ஜனாதிபதி உத்தரவிட்டால் மட்டுமே ராஜினாமா குறித்து சிந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply