இஸ்லாமியர்கள் என் அலுவலகத்திற்குள் வரக்கூடாது: கர்நாடக பாஜக எம்.எல்.ஏ
எனக்கு ஓட்டு போட்டவர்கள் இந்துக்கள் மட்டுமே, எனவே நான் அவர்களுக்கு மட்டுமே பணிபுரிவேன், இஸ்லாமியர்கள் என் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ பாசனகவுடா என்பவர் கூறியுள்ளது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாமல் பாசனகவுடா எம்.எல்.ஏ இவ்வாறு பேசியுள்ளது அனைவரையும் முகம் சுளிக்க செய்துள்ளது.
பாஜக மதவாத கட்சி இல்லை, அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான கட்சி என்பதை முயற்சிக்க கட்சியின் தலைமை தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இவர் போன்ற பேச்சினால் அக்கட்சிக்கு மேலும் பின்னடைவே ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். பாசனகவுடா தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
–
Leave a Reply
You must be logged in to post a comment.