shadow

terroristsஇந்து மக்களை கொலை செய்யவே இந்தியாவிற்குள் ஊடுருவினேன் என காஷ்மீர் காட்டுப் பகுதியில் ராணுவத்திடம் பிடிபட்ட பாகிஸ்தான்  தீவிரவாதி கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற தாக்குதலின் போது உயிருடன் சிக்கிய தீவிரவாதி முகமது நவீத் முதலில் தன் பெயரை காசிம்கான் என்றும் பின்னர் உஸ்மான் என்றும் மாறி மாறி கூறி கடைசியில் முகமது நவீத் என்று கூறியுள்ளான். அவனிடம் ராணுவத்தினர் மேலும் விசாரணை செய்தபோது, “நான் பாகிஸ்தானில் இருந்துதான் வந்தேன். என் தோழன் துப்பாக்கிச்சூட்டில் பலியாகிவிட்டான். நானும் கொல்லப்பட்டிருந்தால், அது அல்லாவின்  விருப்பமாக இருந்திருக்கும். இதைச் செய்வது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. கடந்த 12 நாட்களுக்கு முன்பாகவே எல்லையோர வனப் பகுதிக்குள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்த  நேரம் பார்த்து காத்து கொண்டிருந்தேன். இந்துக்களைக் கொல்லவே பாகிஸ்தானில் இருந்து வந்தேன்’ என்று கூறியுள்ளான்.

பாகிஸ்தானில் இருந்து இளம் தீவிரவாதிகளை காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்த லஷ்கர் தீவிரவாத அமைப்பு அனுப்பும்போது, அவர்கள் பிடிபட்டால் வயதைக்  குறைத்துச்  சொல்ல வேண்டும் என்பது தலைமையின் உத்தரவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இளங்குற்றவாளி என்ற அடிப்படையில் மரண தண்டனை உள்ளிட்ட கொடிய தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என்பதால் இது போன்று குழப்பமான பதில்களை அவன் அளித்ததாக தெரிகிறது. எனவேதான் முகமது நவீத் இந்திய ராணுவத்தினர்களிடம் பிடிப்பட்டபோது தன்னுடைய வயது 16 என்று கூறியுள்ளான். ஆனால் அவனுக்கு உண்மையில் 20 வயது ஆகிறது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply