குஷ்புவை வரவேற்கிறோம். பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி

kushboo1பொதுசிவில் திட்டத்தை சரியான முறையில் புரிந்து கொண்டு ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் குஷ்புவின் கருத்து வரவேற்கத்தக்கது என்று பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் பேட்டியளித்தார்.

பொதுசிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று கருத்து கூறுவது தவறானது. இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய இந்த சட்டத்தை காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு மட்டுமே சரியாக புரிந்து கொண்டு ஆதரவு கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. குஷ்புவை போலவே மற்ற காங்கிரஸ் தலைவர்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

இதேபோல் சமீபத்தில் என்கவுடண்டர் செய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் குறித்து தமிழக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருவது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல. இந்த என்கவுண்டர் வரவேற்கத்தக்கது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.,

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *