shadow

vijay and sudeepகடந்த தீபாவளிக்கு வெளியான கத்தி வெற்றியை அடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. நேற்று விஜய், ஹன்சிகா மற்றும் 300 நடனக்குழுவினர்களுடன் சேர்ந்து நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக சென்னை அருகே ஈசிஆர் சாலையில் பிரமாண்டமான செட் போட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இருவேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் ஹன்சிகா இளவரசியாகவும், அவரது தாயாராக ஸ்ரீதேவியும் நடிக்கின்றார். ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் முக்கிய வேடமேற்கிறார். முழுக்க முழுக்க சரித்திர பின்னணியுடன் படமாகும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நான் ஈ சுதீப் நடிக்கின்றார். தன்னுடைய வேடம் குறித்து சுதீப் கூறியபோது, இந்த படத்தில் நான் விஜய்க்கு எதிரி. எதிரி என்றால் வில்லன் வேடமில்லை, என் கதாபாத்திரம் நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும் என்பது மாதிரி இருக்கும் என்று கூறியுள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் போன்ற படங்களை இயக்கியவர். விஜய்-சிம்புதேவன் இணைந்துள்ள இந்த திரைப்படம் வரும் 2015 ஏப்ரல் மாதம் வெளியாகும்.

Leave a Reply