arjnaஇலங்கையில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளராக போட்டியிட தயார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்க அதிரடியாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட ராஜபக்சேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட தயார் என அர்ஜுன ரணதுங்க அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ‘இலங்கை பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் விரும்பினால் பொதுவேட்பாளராக போட்டியிடத் தயார் என்றும் ஜனாதிபதி வேட்பாளருக்கு தான் தகுதியானவன் என்று கருதினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கொண்டிருந்தாலும் தற்போது நாட்டுக்கு பொதுவான தேவையாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே முக்கிய பணி என்றும் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *